states

img

பாஜகவில் இணைகிறார் சம்பாய் சோரன்: ஆள் பிடிக்கும் வேலையை துவங்கிய பாஜக

ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், ஆளும் ஜேஎம்எம் கட்சியின் மூத்த தலைவருமான சம்பாய் சோரன் வரும் ஆகஸ்ட் 30-ஆம் தேதி பாஜக இணைவார் என ஜார்கண்ட் பாஜக தேர்தல் பொறுப்பாளர் ஹிமந்தா பிஸ்வா சர்மா உறுதி செய்துள்ளார்.

ஜார்க்கண்டில் இந்தாண்டு இறுதியில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கிடையே அங்கே திடீர் அரசியல் குழப்பத்தை பாஜக ஏற்படுத்தியுள்ளது.

ஜார்க்கண்ட் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் கடந்த பிப்ரவரி மாதம் நிலமோசடி வழக்கில் கைதாகி சிறைக்குச் சென்றார். அப்போது ஜேஎம்எம் கட்சியின் மூத்த தலைவர் சம்பாய் சோரன் முதல்வராகப் பதவியேற்றார். சுமார் 5 மாதங்கள் அவர் முதல்வராக இருந்தார். ஹேமந்த் சோரனுக்கு கடந்த ஜூன் இறுதியில் ஜாமீன் கிடைத்த நிலையில், மீண்டும் முதல்வராக ஹேமந்த் சோரன் பதவியேற்றார்.

இதனையடுத்து, முதல்வர் பதவி பறிக்கப்பட்டதால் அதிருப்தியில் சம்பாய் சோரன் புதிய கட்சி தொடங்க போகிறார். பாஜகவில் இணைய போகிறார் என செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், சம்பாய் சோரன் வரும் ஆகஸ்ட் 30-ஆம் தேதி பாஜகவில் இணைகிறார் என அசாம் முதல்வரும், ஜார்க்கண்ட் பாஜக தேர்தல் பொறுப்பாளருமான ஹிமந்தா பிஸ்வா உறுதி செய்துள்ளார்.

இந்தியா கூட்டணி எழுச்சியால் மக்களவை தேர்தலில் பெரும்பான்மை இழந்தது போல ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தலில் பாஜக ஆட்சியை கைப்பற்ற வாய்ப்பில்லை என கருத்துக்கணிப்புகள் வெளியான நிலையில், சம்பாய் சோரனின் அதிருப்தியை பயன்படுத்தி கொண்டும், பாஜக தனது தேர்தல் தோல்வி பதற்றத்திலும் வழக்கம் போல ஆள் பிடிக்கும் வேலையை துவங்கியுள்ளது.